சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தலித் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவருடன் எப்போதும் தனிப் பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனிப் பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்புக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்படாத நிலையிலும் அரசு சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.