மயிலாடுதுறை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். மயிலாடுதுறையில் 2003-ல் நடந்த விசிக பேரணியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 42 பேர் மீது வழக்குப்பதிவு. வழக்கு தொடர்பாக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜரானார். திருமாவளவன் ஆஜரானதை அடுத்து வழக்கை செப்.11-க்கு நீதிபதி விஜயகுமாரி ஒத்திவைத்தார்.