சென்னை: தேர்தல் பிரச்சாரத்தில் 4 நிமிடம் அதிகமாக பேசியதாக திருமாவளவனுக்கு எதிராக தொடாப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. அரியலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டது. 2019 மக்களவை தேர்தலின்போது தேர்தல் விதியை மீறி 4 நிமிடங்கள் அதிகமாக பிரச்சாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருமாவளவனுக்கு எதிராக அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலையத்தில் தொடாப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.
திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து..!!
0