மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கெங்கையம்மன் கோயில் அருகே விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவனின் 62வது பிறந்தநாள் நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது. இதில், காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மண்டல செயலாளர் சிறுத்தை கிட்டு தலைமை தாங்கினார். முன்னாள் நகர துணை செயலாளர் டேன்ஜர் டில்லி முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்தர் கலந்து கொண்டு, 300க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பெண்களுக்கு புடவை, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், விசிக நிர்வாகிகள் ஜெயந்தி, சந்திரன், வேலா, சிறுத்தை ஏழுமலை, கதிரவன், பிரகாஷ் மாஸ்டர் மாரி, சாலமன், தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.