மதுரை : திருமங்கலம் சார்-பதிவாளர் பாண்டியராஜன் மீதான புகாரில் விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை திருமங்கலம் பத்திரப் பதிவு அலுவலர் மோசடியாக விற்பனை செய்ததாக புகார் கூறப்படுகிறது. பதிவுத்துறை தலைவர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பதிவுத்துறை மட்டுமின்றி லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
திருமங்கலம் சார்-பதிவாளர் மீது விசாரணைக்கு உத்தரவு
0