திருமங்கலம் : திண்டுக்கல்லிலிருந்து தூத்துக்குடிக்கு நேற்று காலை 5 டன் வெங்காயம் லோடு ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் சக்திவேல் லாரியை ஓட்டி வந்தார். திருமங்கலம் – வளையங்குளம் நான்குவழிச்சாலை பிரிவில் கட்டுபாட்டை இழந்து லாரி சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
டிரைவர் சக்திவேல் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.இதில் லாரியில் இருந்த வெங்காயங்கள் நான்குவழிச்சாலையில் சிதறியது. இதனை கண்ட வாகனத்தில் வந்தவர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வெங்காயத்தினை எடுத்து சென்றனர். தகவல் அறிந்த பெருங்குடி போலீசார் போக்குவரத்தினை சீர் செய்து டிரைவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். நான்குவழிச்சாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.