திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடாகத் திகழும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி, கோயில் மண்டபத்தில் நடந்தது. இதில் மொத்தம் 2 கோடியே 59 லட்சத்து 32 ஆயிரத்து 514 ரூபாய், தங்கம் 1 கிலோ 515 கிராம், வெள்ளி 17.09 கிலோ, பித்தளை 58.1 கிலோ, செம்பு 93.26 கிலோ, தகரம் 6.5 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 883 ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருச்செந்தூர் கோயில் உண்டியல் வசூல் 2.59 கோடி பணம்; 1.5 கிலோ தங்கம்
0