டெல்லி: சர்ச்சைக்குள்ளான தி கேரளா ஸ்டோரி படத்தின் வெளியீட்டில் தலையிட உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்காக எத்தனை மனுக்கள் தான் தாக்கல் செய்வீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர், அதில் நடித்த நடிகர்கள் குறித்தும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். திகேரளா ஸ்டோரி படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.