பந்தலூர் : கூடலூர் அருகே தேவர்சோலை மச்சிக்கொல்லி பகுதியில் வனத்துறை சார்பில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், கூடலூர் வனச்சரகத்திற்குட்பட்ட பேபி நகர் மச்சிக்கொல்லியில் கடந்த 18.6.2025ம் தேதி ஆறுமுகம் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த மச்சிக்கொல்லி சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் மீண்டும் இது போன்ற மனித வனவிலங்கு மோதல் முரண்பாடுகளை தடுக்க வனத்துறை மூலம் இரண்டு சோலார் விளக்குகள் சாலையில் பொருத்தப்பட்டது.
மேலும், அல்லூர் செல்லும் சாலையில் அவ்வப்போது யானைகள் கடக்கும் இடங்களை தேர்வு செய்து ஏற்கனவே இரண்டு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அல்லூர் சாலையில் மேலும் ஒரு புதிய சோலார் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று பிதிர் காடு வனச்சரகத்திற்குட்பட்ட சந்தக்குன்னுவில் காட்டு யானை தாக்கி ஒரு நபர் உயிரிழந்த சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் இரண்டு சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், முள்ளன் வயல் பழங்குடியின கிராம பகுதியில் யானைகளின் நடமாட்டங்கள் இருப்பதால் அப்பதியில் ஒரு சோலார் விளக்கும் வனத்துறை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.