தேவாரம் : தேனி மாவட்டத்தில் சிறுதானியங்களின் தேவையை அதிகரிக்க உழவு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாகுபடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், மலையடிவாரத்தில் உள்ள நிலங்களில் மானாவாரியாக கம்பு, சோளம், கேள் வரகு, மக்காச்சோளம், இவை சிறுதானியங்களாக இருப்பதால், அதிக ஏக்கரில் பயிரிடப்படுவது வழக்கம். சிறு தானியங்களுக்கு தண்ணீர் தோட்டங்களில் இருந்து பாய்ச்சுவது கிடையாது.
இதற்கு இயற்கையாகவே, மழை பெய்யும் போது, கிடைக்கக்கூடிய தண்ணீர் இல்லாமல், இது தாமாகவே விளைந்து விடும். இதனால் விவசாயிகள் இதனை நம்பி மலையடிவாரங்களில், சிறுதானியங்களை பயிரிடுவர்.
தற்போது சிறுதானியங்கள் என்பதை மலையடிவாரத்தில் அதிகம் காணமுடியவில்லை. காரணம் பருவம் தவறிய மழையால் அங்குள்ள விவசாய நிலங்கள் பெருமளவில் சிறுதானிய விவசாயத்தை தவிர்த்து, மாற்று விவசாயமாக, அவரை, பீன்ஸ், உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்யப்படுகிறது.
இதற்காக உழவு பணிகள் தொடங்கி உள்ளன. சிறுதானிய விவசாயம் இந்த பகுதியில் மட்டும் சுமார் 300 ஏக்கர் பரப்பில் செய்யப்படுவது வழக்கம். தற்போது 100 ஏக்கர் வரை விவசாய உழவு பணிகள் நடக்கிறது.
ஆனால், சிறுதானியை சாகுபடியை கைவிடாமல் தொடர்ந்து செய்து வருவது விவசாயிகளின் மத்தியில் மகிழ்ச்சியாக ஏற்படுத்தி உள்ளது. மேலும், சாரல் மழை பெய்து வருவதால் உழவு பணிகள் தீவிரமடைந்துள்ளன.