விருதுநகர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டமன்ற உறுப்பினர்களுடன் யாத்திரை செல்வதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கட்சித்தொண்டர்களை உற்சாகப்படுத்த தலைவர்கள் பேசும் வழக்கமான ஒன்றுதான் இது. பாஜவால் தனித்து நின்று சட்டமன்ற உறுப்பினர்களை பெற இயலாது. திராவிட கட்சிகளின் தோளில் ஏறித்தான் சட்டமன்ற உறுப்பினர்களை பெற முடியும்.
மறைந்த நடிகர் ராஜேஷ் நல்ல எழுத்தாளர், இலக்கியவாதி, மார்க்சியவாதி, நிறைய புத்தகம், படிப்பார் எனக்கும் பலமுறை புத்தகங்கள் கொடுத்தார். அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி பற்றி கூறிவரும் கருத்து குறித்த கேள்விக்கு, ‘‘அது அவரது கருத்து. இதில் நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை’’ என்றார்.