சென்னை: தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.