தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். தாய் கார்த்திகா தேவியின் சகோதரி மகன் சண்முகவேல்(21) என்பவரின் இருசக்கர வாகனத்தில் சிறுவர்கள் சென்றுள்ளனர். இந்த விபத்தில் சிறுமி மேகா, சிறுவன் சங்கிலி வேல் உயிரிழந்த நிலையில், சண்முக வேல் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.