மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா, முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது, பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105, சுப்மன் கில் 80*, ரோகித் சர்மா 47 ரன்கள் எடுத்தனர்.