சென்னை: பாரிமுனை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக்கின் தாய் மாமன் மீது இளம்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். கோயிலுக்கு வந்த இளம்பெண்ணை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் அர்ச்சகர் கார்த்திக் கைதாகி சிறையில் உள்ளார். அர்ச்சகர் கார்த்திக் விருகம்பாக்கம் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்திக் சிறையில் உள்ள நிலையில அவரது தாய் மாமன் கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான அர்ச்சகரின் தாய் மாமன் மீது பெண் புகார்
210
previous post