அண்ணாநகர்: கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு காரணமாக வெடித்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா பின்புறம் உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதன்காரணமாக மின் தடை ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்தது.பொதுமக்கள் கோயம்பேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டிரான்ஸ்பார்மரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதனைத்தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் எரிந்து சேதம் அடைந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக அகற்றிவிட்டு புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தி மின் இணைப்பு கொடுத்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், மின் கசிவு ஏற்பட்டு டிரான்ஸ்பார்மர் தீ பிடித்தது தெரியவந்தது. பொதுமக்கள் கூறுகையில், ‘’அதிகாலை 2.30 மணி அளவில் குண்டுவெடிப்பதுபோல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தோம். இதனால் வெளியே வந்து பார்த்தபோது டிரான்ஸ்பார்மர் எரிந்துகொண்டு இருந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்து பெரிய அசம