சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய ஆளுநர் அமைத்த தேடுதல் குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆளுநர் அமைத்த தேடுதல் குழுவில் உள்ள பட்டு சத்தியநாராயணா ஒருங்கிணைப்பாளராக தொடர்வார் என்று அரசு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தீனபந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் யுசிஜி பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ரத்தோர் பெயரை சேர்க்காமல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை சேர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.