டெல்லி: பாதுகாப்பு கோரி மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகிறார்கள் என கனிமொழி பேட்டி அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் எம்பிக்கள் மட்டும் சந்தித்து பேசினோம் என தெரிவித்துள்ளார். காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை அழைத்துக் கொண்டுபோய் வன்முறை கும்பலிடம் விட்டுவிட்டது என புகார் தெரிவித்தனர் என கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.