மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக் 167.47 புள்ளிகள் உயர்ந்து 65,888.72 ஆக இருந்தது. இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்வடைந்து 65,903 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 19,570 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை நிலவரப்படி, சென்செக் 167.47 புள்ளிகள் உயர்ந்து 65,888.72 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.90 புள்ளிகள் உயர்ந்து 19,544.90 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் நிலவும் மந்தமான சூழல்களுக்கு மத்தியில், வலுவான காலாண்டு அறிக்கைகளால் இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியது.