நாமக்கல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் நாகலூரை சேர்ந்தவர் வெள்ளையன் (39). இவர் கடந்த 2012ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகேயுள்ள சோழசிராமணிக்கு கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு வந்தார். அப்போது, பச்சகவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 படித்த மாணவியுடன், அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த சிறுமியை கடத்திச் சென்ற வெள்ளையன் பலாத்காரம் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வெள்ளையனை கைது செய்தனர். நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முனுசாமி, வெள்ளையனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.