சென்னை: 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியாகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; 2023 – 2024-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் நாளை 16.11.2023 (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல், நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாத ஆரம்பத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.