திருத்தணி: திருத்தணி அருகே வாகன ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தணி அடுத்த கேஜி கண்டிகை சித்தூர் சாலையில் வசிப்பவர் சிட்டிபாபு மகன் பாபு(27). இவருடைய தம்பி சதீஷ்(25). வாகன ஓட்டுனர். இவர் கிடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலியில் இருந்து வந்ததாகவும் இதற்காக, பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததகாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மின் விசிறியில் நேற்றுமுன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், திருத்தணி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் பூபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், உடலை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.