Wednesday, July 16, 2025
Home மாவட்டம்சென்னை இதுகுறித்துஆவடியைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர் கூறியதாவது: ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நல்ல சாலை வசதிகள் இதுவரை அமைக்கப்படவில்லை. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் உள்ள பல சாலைகள்தார் சாலைகளை தேடும் நிலையில் ஆவடி மாநகராட்சி பகுதிகள்:6தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகளாகியும்

இதுகுறித்துஆவடியைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர் கூறியதாவது: ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நல்ல சாலை வசதிகள் இதுவரை அமைக்கப்படவில்லை. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் உள்ள பல சாலைகள்தார் சாலைகளை தேடும் நிலையில் ஆவடி மாநகராட்சி பகுதிகள்:6தரம் உயர்த்தப்பட்டு ஆண்டுகளாகியும்

by Arun Kumar

தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருந்து வாழ்வாதாரத்தை தேடி சென்னை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிக மக்கள் குடியேறி வரும் சூழலில்சென்னை நகரின் மக்கள் அடர்த்தி அதிகரிப்பால்தற்போது புறநகர் பகுதிகளின் வளர்ச்சி என்பது அசுரத்தனமாக உள்ளது. சென்னையில் வீட்டு வாடகை அதிகரிப்பால் பலர் புறநகர் பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் விளை நிலங்களாக இருந்து புறநகர் பகுதிகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியை பெற்றுள்ளது. இதனால்தொழில் வளர்ச்சிஅவற்றுடன் சேர்ந்த வீட்டுவசதி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம்ஆவடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தமிழக அரசு தரம் உயர்த்தியது. அதன்படிதமிழகத்தின் 15வது மாநகராட்சியாக ஆவடி மாநகராட்சி கடந்த 2019ம் ஆண்டு ஜுன் 17ம் தேதி அன்று தரம் உயர்த்தப்பட்டது.

புதிய மாநகராட்சியில்ஆவடி பூந்தமல்லிதிருவேற்காடு நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் நெமிலிச்சேரிவானகரம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளும் ஆவடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளன. 148 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாநகராட்சியில் சுமார் 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சியை பொறுத்தவரை 48 வார்டுகள் உள்ளன. இங்கே ஒன்றிய அரசுக்குச் சொந்தமான பாதுகாப்புத் துறை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் மட்டுமின்றி பல்வேறு கல்விசார் நிறுவனங்களும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சோழம்பேடுசின்னம்மன் கோவில்அன்னூர்பட்டாபிராம்திருமுல்லைவாயல்சேக்காடுகோவர்தனகிரிதண்டுரைகோவில்பதாகை போன்ற பல்வேறு பகுதிகள் தற்போது அசுர வளர்ச்சியை அடைந்து வருகின்றன.

விவசாய நிலங்களாக காணப்பட்ட இந்த பகுதிகள் எல்லாம் தற்போது வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருகின்றன. அண்ணா நகருக்கு அடுத்தபடியாக ஆவடி மாநகராட்சி பகுதிகளைதான் மக்கள் வீடு வாங்குவதற்கு தேர்வு செய்கின்றனர். அந்த அளவுக்கு தேவையான பள்ளிகள்கல்லூரிகள்உணவு விடுதிகள் என அனைத்து வணிக நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளதால் அதிக முக்கியத்துவம் பெற்ற பகுதியாக உருவெடுத்து வருகிறது.

தாம்பரத்துக்கு அடுத்தபடியாக சென்னையில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பலர் திருமுல்லைவாயல்பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் வந்து செல்கின்றனர். இதனால் ஆவடி பகுதிகளில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கானோர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இவ்வளவு பரபரப்பான ஆவடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகிறது.

அதாவதுஆவடி நகராட்சிமாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சாலைகளின் தரம் உயரவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆவடி மநகராட்சியை பொறுத்தவரை பெரும்பாலான சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்தும்குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். சோதமடைந்த இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் இன்று தொடங்கிவிடும்நாளை தொடங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே தொடர்ந்து மிஞ்சி வருகிறது.

குறிப்பாகஆவடிக்கும் அம்பத்தூருக்கும் இடையில் அமைந்துள்ளசென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலையை ஒட்டி வேகமாக வளர்ந்து வரும் பகுதியான திருமுல்லைவாயல்அதன் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் உச்சத்தை அடைந்துள்ளது. அடுக்குமாடி வீடுகள் தெருவுக்கு தெரு அலங்கரித்தாலும்புதிய புதிய கட்டிடங்கள் நாள்தோறும் கட்டப்பட்டு வந்தாலும்இந்த தெருக்களுக்குள் செல்லும் சாலைகளில் வெறும் ஜல்லிகள் மட்டுமே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையின் எல்லைப் பகுதிகளில் உள்ள பல பகுதிகளைப் போலவேநகரின் மேற்குப் புறத்தில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியானது ஆவடி மாநகராட்சியின் கீழ் வருகிறது. இப்பகுதியில் உள்ள தெருக்களுக்குள் செல்ல வேண்டுமானால்வாகனங்களில் ஆபத்தான பயணத்தையே மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் அப்பகுதிவாசிகள். அதாவதுகர்ணம் தப்பினால் மரணம் என்ற சொல்லுக்கு ஏற்ப வாகனங்களை கவனமாக இயக்காவிட்டால் ஜல்லிகளில் சிக்கி சரிந்து விழுந்து விபத்தை சந்திக்க கூடிய நிலமைதான் உள்ளது.

ஆவடி மாநகராட்சியில் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையாக சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலைஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆவடி அயப்பாக்கம் சாலைமீஞ்சூர் வண்டலூர் வெளிவட்டார சாலைஆவடி சேக்காடு இணைப்பு சாலைகாமராஜர் நகர் மெயின் ரோடுகோவில்பதாகை சாலைகள் உள்ளன. அதேபோன்றுஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக சேக்காடுபட்டாபிராம்நெமிலிச்சேரிதிருநின்றவூர்செவ்வாபேட்டை வேப்பம்பட்டுதிருவள்ளூர்திருத்தணி திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு பெரும்பாலான வாகனங்கள் சிடிஎச் சாலை வழியாக ஆவடியை கடந்து செல்கின்றது. இந்த முக்கிய சாலைகளை பயன்படுத்திதான் தினமும் லட்சக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் 24 மணி நேரமும் பரபரப்பான போக்குவரத்து இருக்கும். அதேபோன்றுகோவில்பதாகை சாலையில் இருந்து தினந்தோறும் மோரைவெள்ளனுர்அமுதுகுளம்பொத்தேரிவீராபுரம்அலமாதிசெங்குன்றம் ஜிஎஸ்டி சாலை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் என முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் கூட பல இடங்களில் சேதமடைந்தும்குண்டும்குழியுமாக காணப்படுகிறது.

மேலும் சில இடங்களில் சாலைகள் குறுகிய நிலையிலும்சில பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. ஆவடி மார்க்கெட் பேருந்து நிலையம் அருகே சாலையில் கடந்த மாதம் குடிநீர் குழாய் பழுதடைந்ததால் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்தனர். சாலையை மீண்டும் சீரமைக்காததால் அவ்வழியே தினந்தோறும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பள்ளி மாணவர்கள்கல்லூரி மாணவர்கள் வேலைக்குச் செல்வோர் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றிபாதாள சாக்கடை பணிகள்குடிநீர் குழாய் புதைக்கும் பணி போன்ற பல்வேறு துறை சார்ந்த பணிகளும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அவற்றை சீரமைப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதால்தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலான இடங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்லும்போது தூசி மண்டலமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும்பாதசாரிகளும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த சாலையில் விலையுயர்ந்த வாகனத்தில் பயணித்தாலும்ஏதோ குதிரைமேல் உட்கார்ந்து சவாரி செய்வது போல அலுங்கி குலுங்கி போகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டியிருப்பதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் திண்டாடும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குண்டும் குழியுமான சாலைகளில் பயணிக்கும்போதுவாகனங்களின் டயர்கள்சஸ்பென்ஷன் போன்ற பாகங்கள் சேதமடைகிறது. மேலும்திடீரென குண்டும் குழியுமாக வரும் சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இவ்வாறுசேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்ய ஆவடி மாநகராட்சிக்கு புகார் மேல் புகார்கள் தொடர்ந்து வந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் உச்சகட்ட கோபத்தை வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது. சேதடைந்த சாலைகளுக்கு தீர்வு கிடைப்பது எப்போது என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சீரமைக்கப்படவில்லை. பல சாலைகள் இன்னும் மண் சாலைகளாக உள்ளன. சீரமைக்கப்பட்ட சாலைகளும் தரமான முறையில் சீரமைக்கப்படாததால் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சீரமைக்கப்பட்ட சாலைகளும் போதிய பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் சேதமடைந்து குண்டும்குழியுமாகவே காட்சி அளிக்கிறது. இவற்றை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் சீரமைத்தால்தான் மழை காலங்களில் சாலைகளை பாதுகாக்க முடியும். வாகன ஓட்டிகள் விபத்துகளில் இருந்து தப்பிக்கவும் முடியும். அதேசமயம் சில வார்டுகளில் முக்கியப் பிரமுகர்கள்வார்டு உறுப்பினர்கள் வசிக்கும் தெருக்கள் மட்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

* சாலையில்

பள்ளம் இல்லை பள்ளத்தில்தான் சாலை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கூறியதாவது: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத வகையில் படுமோசமாக மாறி உள்ளது. சாலையில் பள்ளம் என்பதை விடபள்ளத்தில் தான் சாலையே இருக்கிறது என்று கூறலாம். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். மழைக்காலத்தில் இந்த சாலைகளில் செல்வோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. குடிநீர் வாரியம்மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணிகளுக்காக சாலையோரம் குவிக்கப்பட்டு கிடக்கும் ஜல்லி கற்கள் சாலை நடுவில் பரவி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுகின்றனர். மழைக்காலத்தில் இந்த சாலையில் செல்வோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. உடனடியாக இந்த சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு வழி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்

* தொடரும் போக்குவரத்து நெரிசல்விபத்துகள்

* குண்டும் குழியுமானதால் பொதுமக்கள் அவதி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi