சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதை அதிமுக ஏற்றுக்கொள்ளாது. மாநில உரிமைகளை எந்த சூழ்நிலையிலும் ஒன்றிய அரசு பறிக்கக் கூடாது. மக்களை வஞ்சிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நிச்சயம் தமிழ்நாடு ஏற்காது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தொகுதி குறைப்பு தண்டனையா? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
தொகுதிகளை குறைக்கக் கூடாது: ஜெயக்குமார்
0