Monday, April 15, 2024
Home » மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 58 எம்பி வேட்பாளர்களின் சராசரி சொத்து ரூ.128 கோடி

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 58 எம்பி வேட்பாளர்களின் சராசரி சொத்து ரூ.128 கோடி

by Dhanush Kumar

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 58 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.127.81 கோடி என தேர்தல் கண்காணிப்பு ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் 59 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் தேர்தல் பிரமாண பத்திரத்தில் அளித்த தகவலின் அடிப்படையில், தேர்தல் கண்காணிப்பு ஆய்வு நிறுவனமான ஜனநாயக சீர்த்திருத்தத்திற்கான அமைப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. ஒரு எம்பியின் ஆவணங்கள் தெளிவாக ஸ்கேன் செய்யப்படாததால் அவரை தவிர்த்து 58 வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

58 வேட்பாளர்களில் 36 சதவீதம் பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாக அறிவித்துள்ளனர். அதில் 17 சதவீதம் பேர் மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளும், ஒரு வேட்பாளர் மீது கொலை முயற்சி வழக்கும் உள்ளது. 58 பேரில் 21 சதவீதம் பேர் பெரும் கோடீஸ்வரர்கள். அவர்களின் சொத்து மதிப்பு தலா ஒருவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் உள்ளது. 58 பேரில் சராசரியாக ஒருவருக்கு ரூ.127.81 கோடி சொத்து உள்ளது. அதிகபட்சமாக இமாச்சல பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி ரூ.1,872 கோடியுடன் முதல் இடத்திலும், சமாஜ்வாடி வேட்பாளர் ஜெயா பச்சன் ரூ.1,578 கோடியுடன் 2வது இடத்திலும், மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் குபேந்திர ரெட்டி ரூ.871 கோடியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

மபியின் பாஜ வேட்பாளர் பால்யோகி உமேஷ் நாத் ரூ.47 லட்சம் சொத்துடன் மிகக்குறைவான சொத்துள்ள வேட்பாளராக உள்ளார். மேற்கு வங்க பாஜ வேட்பாளர் சமிக் பட்டாச்சார்யா மற்றும் உபி பாஜ வேட்பாளர் சங்கீதா ஆகியோர் தலா ரூ.1 கோடி சொத்துள்ளவர்கள்.

You may also like

Leave a Comment

fourteen + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi