இணை ஒலிம்பிக் விளையாட்டுகள் அல்லது மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுகள் (Paralympic Games) உடல் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளை பன்னாட்டு இணை ஒலிம்பிக் குழு (IPC- international paralympic committee) கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது.
ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை இந்த போட்டி நடக்கவுள்ளது. இதில் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. உலக அளவில் மொத்தம் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்தியாவில் மொத்தம் 84 பேர் தேர்வாகி உள்ளனர். 52 வீரர்கள் 32 வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 6 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய அணி வில் வித்தை, தடகளம், பேட்மின்டன், சைக்கிளிங், ஜூடோ, வலு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ உள்பட 12 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.