சென்னை: தமிழ்நாட்டில் புகைக்கும் வயதை உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்தியாவுக்கே வழிகாட்டும் இந்த சட்டத்தை இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை உடனடியாக 21ஆக உயர்த்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.