திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் நேற்று காலை 6.50 மணிக்கு சென்னை செல்வதற்காக பல்லவன் விரைவு ரயில் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது அங்கு காத்திருந்த பயணிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏற தயாராக இருந்தனர். அந்த கூட்டத்தில் நின்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான திருச்சி கருமண்டபத்ைத சேர்ந்த ராஜேந்திரன்(72), ரயில் நிற்பதற்குள் முன்பதிவில்லா பெட்டியில் ஏற முயன்றபோது எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்தார். இதில் ரயில் பெட்டிக்கு அடியில் சிக்கினார். அப்போது ரயிலும் நின்று விட்டது. அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து வந்து ரயிலுக்கு அடியில் சிக்கிய ராஜேந்திரனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் சிரமத்திற்கிடையே அவரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.