
திருப்பத்துார்: திருப்பத்தூர் அருகே ஜமனபுதூர் புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி(45), விவசாயி. இவர் சொந்தமாக கரும்பு ஆலை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி வெல்லம் தயாரிக்க கரும்புச்சாறை கொப்பரையில் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, விளையாடி கொண்டிருந்த அவரது 7 வயது மகன் வீரமணி எதிர்பாராத விதமாக கொதிக்கும் கொப்பரையில் தவறி விழுந்தான். உடனே சிறுவனை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு வீரமணி பரிதாபமாக உயிரிழந்தான்.