தஞ்சை: தஞ்சை அருகே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு-சோழபுரம் இடையே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. புதிய சுங்கச்சாவடியின் கட்டண விவரங்களையும் நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.105 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
0