Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் மாவட்டத்தில் 87 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு பணி தொடங்கியது

*15,000 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 87 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு பணிகள் நடைபெற்று உள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 15ம் தேதி கல்லணை வந்தடைந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 15ம் தேதி மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை கால்வாய், கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு வழியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சென்று உள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குருவை நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடிக்கான நடவு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஒரு பக்கம் விளை நிலங்களை உழுதும் பணிகளும், உழவு செய்யப்பட்டுள்ள பல விளைநிலங்களில் தெளிப்பு முறை மூலம் விதை நெல்லை தெளித்தும், நடவு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் வித்யா கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக 1.95 லட்சம் ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்காக நடவு பணிகள் நடைபெற்று உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் டிபிஎஸ் 5, கோ 51, ஏஎஸ்டி 16, ஏ எஸ் டி 21, ஏ டி டி 53, கோ 55 உள்ளிட்ட ரக விதை நெல்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் பகுதியில் அதிகளவில் கோ 55 ரக விதை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு குறுவை சாகுபடிக்காக 9000 டன் யூரியா, 1200 டன் டிஏபி, 1600 டன் பொட்டாஸ், 3200 டன் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் சாகுபடிக்கு தேவைக்கு ஏற்ப இருப்பில் உள்ளது.

அதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கோடை அறுவடை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அம்மாபேட்டை திருவோணம் ஆகிய பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தின் மீதமுள்ள பகுதிகளில் அறுவடை பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அவர்களுக்கான தொகை அவர்களது வங்கி கணக்கில் வர வைக்கப்படுகிறது. குருவை சாகுபடிக்காக தரமான நிலங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என தனியார் இதை விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

தரம் மற்ற விதைகளை விற்பனை செய்தாலோ, விலை கூடுதலாக விற்பனை செய்தாலோ உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அவர்கள் பகுதியில் அருகே உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் சென்று உரங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.