தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (40 வயது). கார் டிரைவர். இவருடைய மனைவி அதிர்ஷ்டலட்சுமி. சம்பவத்தன்று காலை அதிர்ஷ்டலட்சுமி தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது கணவர் மீனாட்சி சுந்தரம் வீட்டில் உள்ள உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் அதிர்ஷ்டலட்சுமி புகார் அளித்தார். இதன்போில் போலீசார் விரைந்து சென்று மீனாட்சி சுந்தரம் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீனாட்சி சுந்தரம் கடன் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.