*பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்ற மக்கள்
வல்லம் : தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அருகே கொல்லாங்கரையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை தனிநபர் சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி சாலைமறியல் நடத்தப்பட்டது. தொடர்ந்து தாசில்தார் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் சாலைமறியல் விலக்கி கொள்ளப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அருகே உள்ளது கொல்லங்கரை ஊராட்சி. இப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையை தனி நபர் ஒரு வர் சேதப்படுத்தி ஆக்கிரமி ப்பு செய்துள்ளார். மேலும் மக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை கண்டித்து கொல்லாங்கரை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த தஞ்சாவூர் தாசில்தார் அருள்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார் அப்போது அந்த ஊரை சேர்ந்த சாமிநாதன் என்பவர் இது தங்களுக்கு சொந்தமான இடம் என்று தெரிவித்துள்ளார். பின்னர் தாசில்தார் அப்பகுதி விஏஓவை அழைத்து விசாரணை செய்தார். அதில்அந்த இடம் வண்டி பாதையாக தான் உள்ளது என்பதை அறிந்து இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சாமிநாதனிடம் எடுத்துக் கூறி இந்தப் பாதையை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சேதப்படுத்திய சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து சேதமடைந்த அந்த சாலையை ஊராட்சித் தலைவர் குணசேகர் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதை சீரமைக்கவும், மக்கள் செல்வும் செய்த தாசில்தாருக்கு பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர்.