தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே லாரி- கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.திருச்சி பால்பண்ணை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த ராஜவேல் மகன் செல்வம் (38). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி நித்யாவுடன் காரில் திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்டார். அப்போது நள்ளிரவில் தஞ்சாவூர் அருகே கோவிலூர் பகுதியில் சென்றபோது எதிரே அம்மாப்பேட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதியது.
இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். நித்தியா படுகாயமடைந்தார். தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார் இடிபாட்டுக்குள் சிக்கி கிடந்த நித்யாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான செல்வம் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.