தங்கவயல்: தங்கவயல் காவல் மாவட்ட காவல்துறையினரால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறுவர் உரிமை, குற்றத்தடுப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பேத்தமங்களா ஊரக உயர்நிலைப் பள்ளி, பங்காருப்பேட்டை உயர்நிலைப் பள்ளி, காசம்பள்ளி ஊரக உயர்நிலைப் பள்ளி, பூது கோட்டை அரசு முதுநிலைக் கல்லூரி, காமசமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி, உரிகம் செயின்ட் ஜோசப் பள்ளி, பி.இ.எம்.எல். நகர் அரசு கல்லூரி, ஆண்டர்சன் பேட்டை கோணமகனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி, மற்றும் ராபர்ட்சன் பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்களை அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து, காவல் துறை குறித்தும், சிறுவர்களின் உரிமைகள் குறித்தும், குழந்தை வன்கொடுமையை தடுக்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தங்கவயல் போலீஸ் மாவட்டம் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
25
previous post