ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தங்கச்சிமடம் மீன் இறங்குதளத்தை மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்தவும், குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை மீனவ சங்க பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.
தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
0