சென்னை: ஜவுளித்துறையை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றுகின்றன. தொழில் நிறுவனங்கள் இங்கேயே தொழில் தொடங்குவதற்கு தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் .