லார்ட்ஸ்: 3வது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டன் லாட்ர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதி வருகின்றன. முன்னதாக இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் நிறைய பேசிய கோப்பை இது.
இந்த தொடரின் பைனலில் ஆடவிரும்பினோம். கடந்த முறையை விட இந்தமுறை பட்டம் வெல்வது கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும். டெஸ்ட் போட்டி தான் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட், என்றார்.