சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் கால் சென்டரில் உளவு மற்றும் தகவல் தொடர்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் கால் சென்டரில் சிம் கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பயன்படுத்திய Sim Tools Box-83, கணினிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஆயிரம்விளக்கு போலீசார் வழக்கு பதிவுசெய்து கால் சென்டர் உரிமையாளர் உட்பட இருவருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.