Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். "உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் இரக்கமற்ற முறையில் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய மண்ணில் அறவே இடம் இல்லை. புதுக்கோட்டையில் பணிபுரியும் கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூலை பஹல்காம் சென்று தமிழர்களை மீட்டு வர அனுப்பி வைத்துள்ளேன்" என சட்டப்பேரவையில் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.