வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் 35 நிமிடங்கள் உரையாடினார். தீவிரவாதத்துக்கு எதிராக போரிட அமெரிக்கா துணை நிற்கும் என மோடியிடம் டிரம்ப் உறுதி அளித்தார் என்றும் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக டிரம்ப்பிடம் பிரதமர் மோடி விரிவாக எடுத்துரைத்தார் என்றும் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டின்போது நேரில் சந்திக்காததால் தொலைபேசியில் இரு நாட்டுத் தலைவர்களும் பேசினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக போரிட அமெரிக்கா துணை நிற்கும் என பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் உறுதி : வெளியுறவுத்துறை செயலர் தகவல்
0