Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் தனது நண்பர் ஜெகதீஷ் என்பவருடன் கூட்டு சேர்ந்து கலைவாணி தியேட்டர் அருகில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். மூன்று மாடி கொண்ட கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் இவரது பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதல் மற்றும் மூன்றாவது தளத்தில் செந்தில் என்பவர் பின்னலாடை நிறுவனம் வைத்துள்ளார். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 8.10 மணியளவில் பின்னலாடை நிறுவனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டைப் பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த ரூ.பல லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் கிலோ பனியன் துணிகள் மற்றும் அட்டைப்பெட்டிகள் எரிந்து சேதமானது. தொடர்ந்து முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் தீ விபத்தில் வெப்பத்தின் காரணமாக சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.