லகைனா: அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயில் 55 பேர் பலியாகி விட்டனர். அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் உள்ள மவுய் பகுதியில் சில தினங்களுக்கு முன் காட்டு தீ ஏற்பட்டது. தீயில் சிக்கி இதுவரை 55 பேர் பலியாகி விட்டனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கையாக ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டுள்ளனர்.