தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது. வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த நிலையில் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. யானை உயிரிழந்ததற்கான காரணம், பிரேத பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.