தென்காசி: தென்காசியில் கனிமவளம் ஏற்றிச் செல்லும் லாரிகளை நிறுத்தி லஞ்சம் பெற்றதாக 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கேரளாவுக்கு கனிமவளம் ஏற்றிச் செல்லும் லாரிகளை மறித்து லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே கனரக வாகனத்தை நிறுத்தி போலீஸ் லஞ்சம் பெறும் வீடியோ வைரலானது.