சென்னை: தென்காசி மாவட்டம், கடனா நீர்த்தேக்கத்திலிருந்து 11.06.2025 முதல் 31.10.2025 முடிய 143 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 125 கன அடி அளவுக்கு மிகாமல், கார் பருவ சாகுபடிக்கு மொத்த தேவையான 664.60 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் வட்டங்களில் தர்மபுரம் மடம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி I&II, மேல ஆம்பூர், கீழ ஆம்பூர், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம், பிரம்மதேசம், பள்ளக்கால், புதுக்குடி, பனஞ்சாடி மற்றும் இரங்கசமுத்திரம் ஆகிய கிராமங்களில் உள்ள பாசனப்பரப்புகள் பயன்பெறும்.