தென்காசி: தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த 2 இளைஞர்களை கைது செய்தனர். மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிபட்டது போல கட்டுபோட்டுக் கொண்டு பிராங்க் வீடியோ எடுத்துள்ளனர். பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் செங்கோட்டையை சேர்ந்த பீர் முகம்மது, சேக் முகம்மது ஆகியோர் கைது செய்தனர். பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்காசி அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது
0