தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக சாய்ந்திருந்த மின்கம்பம் அருகே விளையாடச் சென்ற 2 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 5 வயதான குழந்தை ஜமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று இரவு மிதமான சாரல் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள 2 மின்கம்பங்கள் சாந்துள்ளது. ஒன்று கோவில் மீதும், மற்றொன்று வயல்வெளியிலும் சாய்ந்துள்ளது. இதன் காரணமாக் அங்கு வந்த மின்சார ஊழியர்கள் வயல்வெளிகளுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து விட்டு வீடுகளுக்கு செல்லும் மின்சாரத்தை மட்டும் விநியோகம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வீடுகளுக்கு மத்தியில் உள்ள இரும்பு மின்கம்பங்கள் அருகே 2 சிறுமிகள் விளையாடிகொண்டிருந்தனர். சிறுமிகள் மீது மின்கம்பம் சாய்ந்ததை அடுத்து ஏற்பட்ட மின்கசிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சிறுமிகளை மீட்டுள்ளார். அதில் ஜமித்ரா என்ற 5வயது சிறுமி சலமாக மீட்கப்பட்டார். மற்றொரு 9 வயது சிறுமி பிரதிதா உயிருக்கு போராடிகொண்டிருந்தார். அவரை உடனடியாக ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.