மதுரை: தென்காசியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரும் மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சனை வராத இடங்களில் சிலை வைக்க அனுமதி கோரி புதிய மனு அளிக்க மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விநாயகர் சிலை வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என போலீஸ் கருதினால், மனுவை ரத்து செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார்.