சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி பெருந்திருவிழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இதை முன்னிட்டு இருக்கன்குடி அர்ஜூனா ஆற்றின் கரையில் பொருட்காட்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பொருட்காட்சிக்கு வந்த நத்தத்துப்பட்டி, இருக்கன்குடியை சேர்ந்தவர்கள் இருதரப்பாக கம்பு, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் நத்தத்துப்பட்டியை சேர்ந்த வினோத் (19) படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.